• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- அரசிறை வருமானம் குறித்து சில கொள்கைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினதும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரிச் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் கீழ் சில ஏழு (07) வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன. இச்சட்டங்களின் கீழ் வௌியிடப்படும் ஏதேனும் கட்டளை தொடர்பில் இச்சட்டங்களில் விதித்துரைக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படவேண்டும். அதற்கிணங்க, 2018‑04‑03 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை சுங்கத்திலிருந்து மோட்டார் வாகனங்களை விடுவிப்பதற்கான நிபந்தனைகளை நீக்குவதன் சார்பில் 2018 யூலை 17 ஆம் திகதியைக் கொண்ட 2080/31 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும், சிகரட் பற்றிய உற்பத்தி வரியைத் திருத்துவதன் சார்பில் 2018 யூலை 31 ஆம் திகதியைக் கொண்ட 2082/11 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும், 1,000 CC யினை விட கூடுதலான இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் வாகனங்கள் மீதான உற்பத்தி வரியைத் திருத்துவதன் சார்பில் 2018 யூலை 31 ஆம் திகதியைக் கொண்ட 2082/10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும், 2018‑08‑01 ஆம் திகதியன்றோ அதற்கு முன்னரோ உருவாக்கப்பட்ட நாணயக் கடிதங்களின் (LCs) அடிப்படையில், மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கான சலுகை நியதிகளை மட்டுப்படுத்துவதன் சார்பில் 2018 ஆகஸ்ட் 06 ஆம் திகதியைக் கொண்ட 2083/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும், சுற்றுலாப் பிரயாணிகளுக்கான வற் (VAT) மீளளிப்பு திட்டத்தை (TVRS) அறிமுகப்படுத்துவதன் சார்பில் 2018 செப்ரெம்பர் 10 ஆம் திகதியைக் கொண்ட 2088/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும், TVRS இன் கீழ் குறித்துரைக்கப்படும் ஆகக்குறைந்த மீளளிப்புச் செய்யக்கூடிய பெறுமதி சார்பில் 2018 செப்ரெம்பர் 11 ஆம் திகதியைக் கொண்ட 2088/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும், அத்துடன் சீனி இறக்குமதி தொடர்பில் ஏற்புடைய குறைக்கப்பட்ட வற் (VAT) வீதம் சார்பில் 2018 செப்ரெம்பர் 18 ஆம் திகதியைக் கொண்ட 2089/20 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சர் நிதி மற்றும் வெகுசன ஊடக மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.