• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிரிமண்டல மாவத்தைக்கான அபிவிருத்தி
- கிரிமண்டல மாவத்தை புதிய நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் விருத்தி செய்யப்படவேண்டுமென இனங்காணப்பட்டுள்ள கொழும்பு மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள நான்கு வீதிகளில் ஒன்றாகும். இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 358.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு A.M.S.K - GC கூட்டுத்தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.