• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹைலெவல் வீதியின் வலவ்வத்தைக்கு அண்மையிலிருந்து கட்டுவனவுக்கு அண்மையில் தியகம வீதி வரையும் கொட்டாவையிலிருந்து மாஹேனவத்த வரையுமான புதிய நுழைவுப் பாதையை நிருமாணித்தல்
- ஹைலெவல் வீதியின் வலவ்வத்தைக்கு அண்மையிலிருந்து கட்டுவனவுக்கு அண்மையில் தியகம வீதி வரையும் கொட்டாவையிலிருந்து மாஹேனவத்த வரையுமான புதிய நுழைவுப் பாதையை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 713 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Hoveal Construction (Pvt) Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.