• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிட்டிபன - தலகல வீதியின் பிட்டிபன சந்தியிலிருந்து தாம்பே வீதியின் தரவு நிலையம் வரை 4 கிலோ மீற்றர் தூரத்தினை விருத்தி செய்தல்
- மேல் பிராந்திய தொழினுட்ப நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள மாலம்பே, கடுவெலை, அத்துறுகிரிய மற்றும் ஹோமாகம நகரங்களின் ஏனைய பிரதேசங்களுடனான போக்குவரத்து தொடர்புகளை விருத்தி செய்வதற்கு 05 பிரதான வீதி அபிவிருத்தி கருத்திட்டங்கள் முன்னுரிமைவாய்ந்தவையென இனங் காணப்பட்டுள்ளது. இவற்றுள் பிட்டிபன - தலகல வீதியின் பிட்டிபன சந்தியிலிருந்து தாம்பே வீதியின் தரவு நிலையம் வரையுள்ள 4 கிலோ மீற்றர் தூரத்தினை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் சிபாரிசின் பிரகாரம் .Finite Lanka (Pvt) Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.