• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாணந்துறை ஆதார வைத்தியசாலையை புனரமைத்தலும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்தலும்
- பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஆறு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணித்தல், பதவியணியினருக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை நிருமாணித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமொன்று உட்பட இவற்றுக்குத் தேவையான மருத்துவ மற்றும் ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 106.49 மில்லியன் யூரோக்களைக் கொண்ட தொகைக்கு ஜேர்மனியின் M/s GITEC-IGIP GimbH நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.