• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரிச் சலுகைகளை வழங்கும் பொருட்டு 2017ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரி சட்டத்தை திருத்துதல்
- பல்வேறு தரப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து சிறுவர் சேமிப்பு கணக்கிலிருந்தான வட்டி வருமானம் மீதான பிடித்து வைத்தல் வரி, அரசாங்க பிணையங்களிலிருந்தான வருமானங்கள் மீதான பிடித்து வைத்தல் வரி, வதிவல்லாதோர் கடன்கள் தொடர்பில் வட்டி மீதான பிடித்து வைத்தல் வரி, வேத்துரிமை மீதான பிடித்து வைத்தல் வரி, விமான குத்தகை மீதான பிடித்து வைத்தல் வரி என்பவற்றுக்கு விலக்களிப்பதற்கும் வாடகை மீதான பிடித்து வைத்தல் வரிவீதத்தைக் குறைப்பதற்குமாக 2017ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரி சட்டத்தை திருத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.