• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்படும் மதுவரி தொடர்புட்ட அறிவித்தல்கள் இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இதற்கிணங்க, அதன் உற்பத்தியின் 100 சதவீதத்தை ஏற்றுமதிக்காகவே உற்பத்தி செய்யும் முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் பெற்ற கைத்தொழிற்சாலைகளினால் உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் குடிப்பதற்கு ஏற்றதாகாத ஸ்பிரிட் சார்பில் செலுத்தப்படவேண்டிய வரி தொடர்பில் சலுகை அளிப்பதற்கு மதுவரி கட்டளைச்சட்டத்தின் 22(3) ஆம் பிரிவின் பிரகாரம் வௌியிடப்பட்ட 2018‑10‑03 ஆம் திகதியிடப்பட்டதும் 2091/50 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மதுவரி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.