• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் (CITES) 18 ஆவது மாநாட்டிற்கு உரியதாக அனுசரணை வழங்குதல்
- அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் (CITES) 18 ஆவது மாநாட்டிற்கு உரியதாக அனுசரணை வழங்கும் பணியானது இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, இந்த மாநாடானது 2019 மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து யூன் மாதம் 03 ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது. இதில் 183 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கலாக சுமார் 4,000 பேர்கள் கலந்துகொள்வார்களென கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சருவதேச மாநாட்டு மண்டப மனையிடத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சருவதேச மாநாட்டு மண்டபம், ஏனைய கட்டடங்கள் உட்பட தொடர்புபட்ட உரிய சேவைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு 230.37 மில்லியன் ரூபாவை செலுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.