• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெனியாயவிலிருந்து ரக்வான வரையான A 17 வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம்
- காலி - தெனியாய - மாதம்பே வீதியை மொரவக்க, தெனியாய, சூரியகந்த மற்றும் இறக்குவானை ஆகிய பிரதான நகரங்களை இணைத்து செல்வதோடு, இந்த வீதியானது A தர பிரதான வீதிகள் மூன்றும் B தர வீதிகள் பத்தும் இணைந்துள்ளன. இதில் தெனியாயவிலிருந்து ரக்வான வரையான 53 கிலோ மீற்றர்களைக் கொண்ட வீதியை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் 02 கட்டத்தின் கீழ் 51.75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீட்டுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதன் முதலாம் கட்டமாக சூரிகந்தவிலிருந்து இறக்குவான வரையிலான 18 கிலோ மீற்றர்களைக் கொண்ட பகுதியும் இரண்டாம் கட்டமாக தெனியாயவிலிருந்து சூரியகந்த வரையிலான 35 கிலோ மீற்றர்களைக் கொண்ட பகுதியும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 40 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகையினை வழங்குவதற்கு சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான கடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.