• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு நகரத்தில் நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- கொழும்பு நகரத்தை தூய்மைமிக்க மனம் கவரும் நகரமொன்றாக மாற்றும் பொருட்டு தற்போது குடிசைகளில் வசிக்கும் மக்களை புதிய வீடமைப்பு தொகுதிகளில் மீளக் குடியமர்த்துதல் உட்பட நகரம் சார்ந்த காணிகளை மிக பயனுள்ள வகையில் பயன்படுத்தும் நோக்கிலும் கொழும்பு நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தை 287 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீட்டில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது குறைந்த வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 50,000 குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் கீழ் நிலை நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கும் உரிய தரம்வாய்ந்த வீட்டு நலன்கள் கிடைக்கப்பெறும்.
இதற்கிணங்க இந்த கருத்திட்டமானது வீடமைப்பு, காணிகளின் மீள் அபிவிருத்தி மற்றும் தொழினுட்ப உதவியும் கருத்திட்ட முகாமைத்துவமும் என்னும் 3 பிரதான ஆக்கக்கூறுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு, இதன் பொருட்டு ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி, இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் துறை என்பவற்றின் ஊடாக நிதி பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியினால் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள நிதியினை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான கடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.