• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகைமை மற்றும் அனுபவம் மிக்க தொழில்சார்பாளர்களை நியதிச்சட்ட சபைகளின் தலைவர்களாகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் நியமித்தல்.
- அரசாங்க கூட்டுத்தாபனங்கள் / நியதிச்சட்ட சபைகள் உட்பட அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு தலைவர்களையும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் நியமிக்கும் போது குறித்த தொழில்முயற்சிகளின் நோக்கங்கள் மற்றும் குறியிலக்குகளை அடைவதற்கு இயலுமாகும் வகையில் தொழில்சார் தகைமையுடன் அனுபவம் மிக்கவர்களை தலைவர்களாகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் நியமிக்கும் தேவை அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆதலால், குறித்த தொழில்முயற்சிகளின் பணிப்பாளர் சபைக்கு உத்தியோகப்பூர்வமாக நியமனம் பெரும் உறுப்பினர்கள் (Ex - Officio) தவிர, ஏனைய நியமனங்களை செய்யும் போது அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்டுள்ள தகவு திறன்களை அடிப்படையாக கொண்டு இலங்கையிலோ அல்லது வௌிநாட்டிலோ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டதாரி ஒருவராக இருத்தல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழிற்தகைமை மற்றும் உரிய துறையில் நீண்ட தொழில் ரீதியிலான அனுபவம் மிக்கவர்களை நியமிப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு இயலுமாகும் வகையில் தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு சனாதிபதியின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.