• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டின் ஆரம்ப நான்கு மாதங்களுக்கான அரசாங்க செலவுகளை ஏற்றல்
- அண்மையில் அமைச்சுக்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டமையினால் 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட அட்டவணையை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லாமையினால் இதற்கு முன்னர் இதற்கு சமமான சந்தர்ப்பங்களில் பின்பற்றப்பட்ட முன்மாதிரிகளுக்கு அமைவாக 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் அங்கீகரிக்கப்படும் வரை 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் சார்பில் அரசாங்க சேவைகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்குத் தேவையான வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளை இடைக்கால கணக்கொன்றின் மூலம் செய்து கொள்வவதற்கும் அதற்கான பிரேரணைகளைத் வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.