• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனைவிடத்தின் ஆழமான நங்கூரமிடல் பிரதேசத்தின் கொள்ளளவை விருத்தி செய்வதற்கான கருத்திட்டத்தின் சிவில் வேலை ஒப்பந்தங்களை கையளித்தல்
- கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் பெரிய அளவிலான கப்பல்களை கையாள்வதற்கு போட்டிகரமான வாயப்புகளை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஒருங்கிணைவாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனைவிடத்தின் ஆழமான நங்கூரமிடல் பிரதேசத்தின் கொள்ளளவை விருத்தி செய்வதற்காக இந்த அதிகாரசபையின் நிதியினைப் பயன்படுத்தி செயற்படுத்தப்படும் கருத்திட்டத்தின் சிவில் வேலை ஆக்கக்கூறுகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s. China Harbour Engineerig Company Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.