• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனைவிடத் திற்கான கொள்கலன் கையாள்கை உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனைவிடத்தை நவீனமயப்படுத்துவதன் கீழ் ஜய கொள்கலன் முனைவிடம் (JCT)-V சார்பில் கப்பல்களிலிருந்து கரையோரம் வரை கொள்கலன் கையாள்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான 03 பாரந்தூக்கிகளை இந்த அதிகாரசபையின் நிதியினைப் பயன்படுத்தி கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 25.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு M/s. Shanghai Zhenhuau Heavy Industries Co.Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.