• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நட்பு நகரங்கள் என்னும் எண்ணக் கருவின் கீழ் இலங்கையில் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கும் வௌிநாடுகளிலுள்ள மாகாண நிறுவனங்களுக்கும் இடையில் உடன்படிக்கைகளை / புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளல்
- நட்பு நகரங்கள் என்னும் எண்ணக் கருவின் கீழ் பல்வேறு உள்ளூராட்சி அதிகாரசபைகளினால் வௌிநாடுகளிலுள்ள வெவ்வேறு மாகாண நிறுவனங்களின் ஒத்தாசையுடன் பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. அத்தகைய நிகழ்ச்சித்திட்டங்கள் அல்லது உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்காக கிடைக்கப்பெற்றுள்ள கோரிகைகளை மதிப்பிட்டு தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உரிய சகல அமைச்சுக்களையும் நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.