• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1990 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொடுகடன் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
- கடன் அறவிடலை துரிதப்படுத்தும் நடவடிக்கைமுறையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் 1990 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொடுகடன் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும், இந்த சட்டத்தின் மூலம் முன்னைய கடன் வழங்கும் நிறுவனங்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டுள்ள மையினால் அதன் பின்னர் தாபிக்கப்பட்ட உரிமப்பத்திரம் பெற்ற விசேட வங்கிகளும் கூட இந்த சட்டத்தின் நோக்கங்களுக்காக உள்ளடக்கும் பொருட்டு தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த சட்டத்தின் 30 ஆம் பிரிவைத் திருத்துவதற்காக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.