• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்
- அதிவரிச் சுமையினை தளர்த்தி உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களையும் கைத்தொழில்களையும் பலப்படுத்துதல், கமத்தொழில் துறையை வலுவூட்டுதல் மற்றும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்து நுகர்வோருக்கு சலுகை அளித்தல் என்பவற்றின் மூலம் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் கீழ் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தல், விவசாயிகள், சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள், வறட்சி நிலவி பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் போன்றவர்களினால் பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகை சார்பில் சலுகை அளித்தல், இரசாயன பசளையை சலுகை விலைக்கு வழங்குதல், அதிவரிச் சுமையை குறைத்தல், உள்நாட்டு விவசாயிகள், நிருமாணிப்பு, சிறிய அளவிலான வர்த்தகர்கள், வௌிநாட்டு தொழிலாளர்கள், தொழில்சார்பாளர்கள் உட்பட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு வரிச் சலுகை வழங்குதல், சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் அடங்கலாக பல்வேறுபட்ட சலுகைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பிரதம அமைச்சரும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2018‑11‑01 ஆம் திகதியன்று வௌிப்படுத்தப்பட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்காக உரிய சட்டங்களுக்கு செய்யப்பட வேண்டிய திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு பிரதம அமைச்சர் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.