• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி மேம்படுத்தல் துறைசார் கருத்திட்டத்தின் கீழ் இனாமலுவ, கித்துல்ஹிட்டியாவ, சீகிரிய, ஹபரண, கலேவெல மற்றும் தித்தவெல்கொள்ள பிரதேசங்களுக்கு நீர் வழங்குதல்
- உள்ளூராட்சி மேம்படுத்தல் துறைசார் கருத்திட்டத்தின் பாரிய தம்புள்ளை நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் இனாமலுவ, கித்துல்ஹிட்டியாவ, சீகிரிய, ஹபரண, கலேவெல மற்றும் தித்தவெல்கொள்ள பிரதேசங்களைச் சேர்ந்த நீர்த் தேவைகளுக்காக நீர்வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இனாமலுவ மற்றும் கித்துல்ஹிட்டியாவ பிரதேசங்கள் சார்பில் நீர்வழங்கலை நீடிக்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை 491.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கும் சீகிரிய மற்றும் ஹபரண பிரதேசங்கள் சார்பில் நீர்வழங்கலை நீடிக்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை 415.3 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கும் PND மற்றும் E & C கூட்டுத் தொழில்முயற்சிக்கும் கலேவெல மற்றும் தித்தவெல்கொள்ள பிரதேசங்கள் சார்பில் நீர்வழங்கலை நீடிக்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை 660.6 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு Squire Mech Engineering (Pvt)., Ltd., கம்பனிக்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.