• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டு சார்பில் பாடசாலை சீருடைத் துணிகளை வழங்குதல்
- இலவச கல்வி பெறும் பிள்ளைகளின் கல்விக்கான சமவாய்ப்பினை உறுதி செய்வதற்காக சுமார் 40 இலட்சம் கொண்ட பிள்ளைகள் அனைவருக்கும் பாடசாலை சீருடைத் துணிகள் 1993 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 25 வருடகாலமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் பொருட்டு அண்மைக் காலத்திலிருந்து பின்பற்றப்பட்ட "வவுச்சர் முறையுடன்" ஒப்பிட்டு பார்க்கும் போது உள்நாட்டு துணி உற்பத்தியாளர்களிடமிருந்து பாடசாலை சீருடைத் துணிகளைப் பெற்று முன்பு நடைமுறையிலிருந்தவாறு சீருடைத் துணிகளைப் பெற்றுக் கொள்வது பொருளாதார ரீதியில் பயன்மிக்கதென இனங்காணப்பட்டுள்ளது. இந்த வழிமுறையின் கீழ் துணி மீற்றர் ஒன்றிலிருந்து சுமார் 50 ரூபா சேமிப்பாக நிலவுகின்றமை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து துணி பெற்றுக் கொள்வதன் மூலம் உருவாகும் அந்நிய செலாவணி சேமிப்பு என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2019 ஆம் ஆண்டு சார்பில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கும் பொருட்டு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.