• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"வட கிழக்கு விவசாய நவோதய" என்னும் துரித விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய கமத்தொழில் அறுவடைகளை மேலும் விருத்தி செய்வதற்கு குறைந்த பயன்பாடு, விதை பற்றாக்குறை, காணிப் பாவனையில் நிலவும் பிரச்சினை, காலநிலை மாற்றங்கள், பின் அறுவடை முகாமைத்துவ குறைபாடுகள், விற்பனை உட்பட பெறுமதி சேர்த்தலில் காணப்படும் இடையூறுகள், நீர்வழங்கல் பிரச்சினைகள் குளங்களின் புனரமைப்பு, கமத்தொழில் பாதைகள் சார்ந்த பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வதசிகளின் பற்றாக்குறை மற்றும் கமத்தொழில் துறைக்குரிய உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை போன்ற சவால்களை தவிர்க்க வேண்டியுள்ளதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பினை மேலும் மேம்படுத்துவதற்கும் இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்குமாக "வடக்கு கிழக்கு விவசாய நவோதய" என்னும் துரித விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.