• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைவிடப்பட்ட கிராமிய குளங்களை புனரமைத்தல்
- கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சிறிய நீர்ப்பாசன மற்றும் ஆரம்ப நீர்வள மூலங்கள் தொடர்பிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தற்போது 14,421 குளங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதோடு, உள்நாட்டு மோதல்கள், தொற்று நோய்கள் பரவுதல் போன்ற காரணங்களின் மீது 1,958 கிராமிய குளங்கள் கைவிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் குளங்களை புனரமைப்பதன் மூலம் புதிய பயிர் செய்யும் நிலங்களாக சுமார் 97,900 ஏக்கரை பயிர் செய்வதற்காக பயன்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக தற்போது கைவிடப்பட்டுள்ள இந்த குளங்களை புனரமைப்பதன் மூலம் நிலக்கீழ் நீரின் போஷிப்பு, தற்போதுள்ள திறந்த வௌிகளில் வனத்தின் அளவினை அதிகரித்தல் காட்டு விலங்குகளின் பயன்பாடு போன்ற சேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மீண்டும் புனரமைப்பது பொருத்தமானதென தொழினுட்ப ரீதியில் உறுதிப்படுத்தப்படும் குளங்களை புனரமைக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக் கப்ட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.