• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் கல்லூரிகளில் வசதிகளை மேம்படுத்துதல்
- இளைய சமூகத்தினரை கமத்தொழில் துறையின்பால் ஈர்த்துக் கொள்வதற்காக நவீன தொழினுட்பம் தொடர்பில் அவர்களுக்கு கல்வி அறிவினை வழங்கி தேசிய தொழிற் தகைமை 6 ஆம் மட்ட (NVQ 6) கமத்தொழில் டிப்ளோமாதாரிகள் குண்டசாலை, பெல்வெஹர, அங்குனுகொலபெலஸ்ஸ, கரபிஞ்ச, வவுனியா ஆகிய பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ள ஐந்து கமத்தொழில் கல்லூரிகளிலிருந்து வௌியேறுகின்றனர். இந்த கமத்தொழில் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு சிறந்த தரம்மிக்க கல்வியினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டின் கமத்தொழில் உற்பத்தியின் அளவு ரீதியிலும் தர ரீதியிலும் மேம்படுத்துவதற்கு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சின் ஒத்துழைப்புடன் செய்வதற்காக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.