• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு பயிர்வகைகளின் மிகை மற்றும் தட்டுப்பாடு என்பவற்றினை எதிர்வு கூறுவதற்கான முன் எச்சரிக்கை முறைமையை பலப்படுத்துதல்
- நாடு முழுவதும் பயிர்செய்யப்பட்ட பயிர்களின் நிலைமை, போக ரீதியில் எதிர்பார்க்கப்படும் அவற்றின் உற்பத்தி, பயிர் சேதம், அறுவடை போன்றவை தொடர்பிலான தகவல்களை உள்ளடக்கிய பயிர் எதிர்வு கூறல் அறிக்கைகள் கமத்தொழில் திணைக்களத்தினால் வௌியிடப்படுவதோடு, இந்த தரவுகள் உணவு பயிர்வகைகளின் இறக்குமதி உட்பட நடைமுறை ரீதியில் தீர்மானம் எடுப்பதற்கு தற்போது பயன்படுத்தப்படும் நம்பத்தகுந்த தரவுகளெனக் கருதலாம். இந்த தரவு முறைமையானது பயிர் எதிர்வு கூறல் தகவல் முறைமை என்னும் மென்பொருளின் ஊடாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தரவுகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தும் நோக்கில் தற்போது நாடு முழுவதையும் தழுவும் விதத்தில் தாபிக்கப்பட்டுள்ள கமநல நிலையங்கள், கமத்தொழில் பிரதி பணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் மகாவலி வலய அலுவலகங்களிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி விருத்தி செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.