• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையக கட்டடத்தை நிருமாணித்தல்
- கூட்டங்கள், செயலமர்வுகள் நிருவாக மேற்பார்வை மற்றும் இருதரப்பு உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடாத்துவதற்கும் அரசாங்க நிறுவனங்களுடன் முறையான ஒருங்கிணைப்பை பேணுவதற்கும், இலங்கை கடல்சார் வலயத்தை பாதுகாப்பும் இவ்வலயத்திற்குள் உயிர்களினதும் ஆதனங்களினதும் பாதுகாப்பும் பொறுப்பளிக்கப்பட்டுள்ள இத்திணைக்களத்தின் கடமைகளின் கூடுதல் வினைத்திறனான மற்றும் பயனுறுதிவாய்ந்த செயற்றிறனுக்கு ஏதுவாக கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிருவாக தொழிற்பாடுகளையும் மேற்பார்வை செய்வதற்கும் கொழும்பு நகரத்திற்கு மிக அருகாமையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்தை தாபிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட திணைக்களத்தின் வேறு ஒரு அலுவலகம் ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள வௌ்ளவத்தைப் பிரதேசத்தின் சுற்றுப் புறத்திற்குள் இத்திணைக்களத்தின் தலைமையத்திற்கான பதினொரு மாடி கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.