• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை மாற்றங்களை குறைப்பதற்கான பங்களிப்புக் கருத்திட்டம்
- உலக வங்கியின் உதவியின் கீழ், பச்சைவீட்டு வாயு விடுவிப்புகளை குறைப்பதற்காக காலநிலை மாற்றங்களை குறைப்பதற்கான பங்களிப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இக்கருத்திட்டத்தின் முறையான முகாமைத்துவத்திற்காக, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளையும் உரிய துறைகளில் நிபுணத்துவ அறிவு பொருந்திய ஆட்களையும் உள்ளடக்கிய கருத்திட்ட முகாமைத்துவ அலகொன்றைத் தாபிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.