• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
- 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் வௌிப்படுத்தப்பட்ட எந்தவொரு கட்டளையும் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இதற்கமைவாக, வௌிநாட்டு சுற்றுலா பயணிகளினால் கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்தப்படும் வட் வரித் தொகையை மீளளிக்கும் முறையினை அமுல்படுத்தும் திகதியை வௌிப்படுத்திய 2018‑09‑10 ஆம் திகதியிடப்பட்டதும் 2088/2 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், மேற்போந்த முறையின்கீழ் செலுத்தப்பட்ட வட் வரித் தொகையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கக்கூடிய பொருட்கள், அவற்றின் ஆகக்குறைந்த பெறுமதி உட்பட பணம் மீளப் பெறும் விதம் என்பவற்றை விபரித்து வௌிப்படுத்திய 2018‑09‑11 ஆம் திகதியிடப்பட்டதும் 2088/25 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், துணி இறக்குமதிக்கு வட் வரி சேர்த்தமை காரணமாக சிறிய அளவிலான துணி உற்பத்தியாளர்களுக்கு நிகழும் பாதிப்பினை கருதிற் எடுத்துக் கொண்டு, துணி இறக்குமதிக்குரியதான வட் வரி விகிதாசாரத்தை 5 சதவீதமாக குறைத்து வௌிப்படுத்திய 2018‑09‑17 ஆம் திகதியிடப்பட்டதும் 2089/13 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் சீனி இறக்குமதி அல்லது இறக்குமதி செய்து விநியோகிப்பதன் மீதான வட் வரி விகிதாசாரத்தை 15 சதவீதத்திலிருந்து 0 சதவீதம் வரை குறைப்பதற்காக வௌிப்படுத்திய 2018‑09‑18 ஆம் திகதியிடப்பட்டதும் 2089/20 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் என்பன உள்ளடக்கப்பட்ட வர்த்தமானிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்ப தற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.