• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018/2019 ஆண்டிற்கான இயற்கை அனர்த்த காப்புறுதி திட்டத்திற்கான மீள் காப்புறுதி காப்பீடு
- இயற்கை அனர்த்தங்களிலிருந்து முழு நாட்டையும் பாதுகாப்பதற்கு 2016 ஆம் ஆண்டில் காப்புறுதி திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்புறுதி திட்டமானது தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன்கீழ் தற்போது 15 பில்லியன் ரூபா காப்புறுதி காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தங்களினால் நிகழும் சேதங்கள் காரணமாக தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் நிதி நிலைமைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தினை குறைத்துக் கொள்ளும் பொருட்டு அங்கீரிக்கப்பட்ட சருவதேச மீள்காப்புறுதி கம்பனிகள் மூலம் மீள் காப்புறுதி காப்பீடொன்றைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.