• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலை வசதிகளை விருத்தி செய்தல்
- 2018 சிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்காக பெலியத்த மற்றும் மீகஹஜதுர பிரதேசத்தில் 2,000 மெற்றிக் தொன் கொள்ளவினைக் கொண்ட புதிய 02 களஞ்சியசாலைகளை நிருமாணிப்பதற்கும் பழைய 39 நெல் களஞ்சிய சாலைகளை திருத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விஞ்ஞான மற்றும் நவீன தொழினுட்ப ரீதியில் மேற்கொள்வதற்குத் தேவையான பொறியியல் மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் ஒப்பந்தக்காரரர்களை தெரிவு செய்வதற்கும் வேலைகளை மேற்பார்வை செய்வதற்குமான பணிகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தினைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.