• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிட்டிபன - தலகல வீதியின் பிட்டிபன சந்தியிலிருந்து தாம்பே வீதி தரவு நிலையம் வரை 4 கிலோ மீற்றர் தூரத்தை விருத்தி செய்வதல்
- மேல் மாகாண தொழினுட்ப அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் மாலம்பே, கடுவெல, அத்துருகிரிய மற்றும் ஹோமாகம நகரங்களை ஏனைய பிரதேசங்களுடன் உள்ள போக்குவரத்து இணைப்புகளை விருத்தி செய்வதற்காக 05 பிரதான வீதி அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. இதில் பிட்டிபன - தலகல வீதியின் பிட்டிபன சந்தியிலிருந்து தாம்பே வீதி தரவு நிலையம் வரை 4 கிலோ மீற்றர் தூரத்தை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் M/s.Finite Lanka (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.