• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாணந்துறை ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தலும் மருத்துவ உபகரணங்களை வழங்குதலும்
- பேருவளை, களுத்துறை, பண்டாரகம, இரத்தினபுரி, மொறட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்குமான பெறுகையை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 106.4 மில்லியன் யூரோவுக்கு ஜேர்மனியின் M/s.GITEC IGIP Consultant GmbH நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.