• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கீழான நிருமாணிப்புகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் ஒப்பந்தமானது M/s.China Machinery Engineering Corporation (CMEC) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் செய்யக்கூடிய மேலும் 08 பிரதான நிருமாணிப்புகளை துணை ஒப்பந்தங்களாக செய்து கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் துணை ஒப்பந்தம் ஒன்றான அத்தனகல்ல பிரதேசத்தில் அனுப்பீடு மற்றும் விநியோக முறைமையின் பிரதான குழாய்களுக்கான உதிரிப் பாகங்கள் மற்றும் நீர் குழாய்களை பதிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s.Sierra Construction Limited மற்றும் K DA Weerasinghe Co. (Pvt.) Limited நிறுவனத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள கூட்டு தொழில்முயற்சிக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.