• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆனமடுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் வசதிகளை விரிவுபடுத்துதல்
- தற்போதைய தொழிற்சந்தையை குறியிலக்காகக் கொண்டு பாடநெறிகளை நடாத்தும் பொருட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஆனமடுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதில் சமையற்கலை, பேக்கரி சார்ந்த உற்பத்திகள், கணனி கிரப்பிக் டிசைன் மற்றும் மனிதவள முகாமைத்துவம் போன்ற தேசிய தொழிற்தகைமை (NVQ) 4 ஆம் (க.பொ.த. உயர் தரத்திற்கு சமமான) மட்டத்திற்குரிய தொழிற்சந்தையில் ஆகக்கூடுதலான கேள்வியுடனான பாடநெறிகளை நடாத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கிணங்க, 100 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை ஒதுக்கும் பொருட்டு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.