• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து வகைகள் தொடர்பான பட்டியல் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடாத தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து மற்றும் முறைகள் உள்ளடக்கப்பட்ட பட்டியலொன்று உலக தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மையினால் வருடாந்தம் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒருங்கிணைவாக 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பாவனைக்கெதிரான சமவாய சட்டத்தின் 34 ஆம் பிரிவின் பிரகாரம் இலங்கையில் இவற்றை விளையாட்டுக்களின் போது தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து வகைகளாக வௌிப்படுத்தி பிரசுரிக்கப்பட்டுள்ள பட்டியல் உள்ளடக்கப்பட்ட 2083/32 ஆம் இலக்கத்தைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.