• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகை பொருட்கள் விநியோக
- கமத்தொழில் திணைக்களத்தின் விதை பண்ணைகளின் செய்யப்படும் உற்பத்தி செயற்பாடுகளுக்கு அத்தியாவசிய வசதிகளில் நிலவும் வரையறை காரணமாக தேவையான அளவில் விதை உற்பத்திகளைச் செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது. இதற்கிணங்க, விதை பதனிடல் செயற்பாட்டினை இயந்திர மயப்படுத்தல், மகாஇலுப்பள்ளம, அம்பாறை மற்றும் அளுத்தரம பண்ணைகளில் கூட்டு உலர்த்தும் மற்றும் பதனிடல் முறைமையைத் தாபித்தல், பல்வெஹெர மற்றும் பட்டஅத்த பண்ணைகளுக்குத் தேவையான இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்தல், ரஹங்கல, சீதாஎலிய, பட்டஅத்த மற்றும் அம்பாறை பண்ணைகளில் 04 விதைக் களஞ்சியங்களை நிருமாணித்தல் மற்றும் விதை மற்றும் நடுகை பொருட்கள் அபிவிருத்தி நிலையங்களும் ஏனைய வசதிகளின் அபிவிருத்தி போன்றவற்றுக்குத் தேவையான முதலீட்டினை நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.