• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விதை மற்றும் நடுகை பொருட்களின் தரத்தினை மேம்படுத்துத
- உணவுப் பயிர்கள், பெருந்தோட்டப் பயிர்கள், ஏற்றுமதி கமத்தொழில் பயிர்கள், அழகுப் பூ மற்றும் இலைத்தொகுதி, வனச் செய்கை கன்றுகள், மூலிகை செய்கை கன்றுகள் போன்ற நடுகைப் பொருட்கள் சகலவற்றினதும் தரத்தினை கட்டுப்படுத்துவதற்கு சட்ட அதிகாரமும் பொறுப்பும் 2003 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க விதை சட்டம் ஊடாக கமத்தொழில் திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நோக்கத்திற்காக தற்போது பின்பற்றப்படும் வழிமுறையினை தொடர்ந்தும் செம்மையாகவும் முறையாகவும் வினைத்திறனுடனும் செய்து கொள்ளும் பொருட்டு கமத்தொழில் திணைக்களத்தின் விதை சான்றுபடுத்தல் சேவையின் கீழ் இயங்கும் விதை ஆய்வுகூடங்களுக்கு மேலும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.