• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கதிர்காம புனித நகரத்தில் பொதுக் கழிவறை வசதிகளை நிருமாணித்தல்
- கதிர்காமம் புண்ணியபூமி அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது இந்த கருத்திட்டத்திற்கு மேலதிகமாக, கதிர்காம புனித நகரத்திற்கு வருகைதரும் பொதுமக்களின் துப்பரவேற்பாட்டு வசதிகள் உட்பட கழிவுகளை அகற்றும் வசதிகள் போதுமான மட்டத்தில் இல்லாமையினால் கதிர்காமம் மற்றும் கபலித்த பிரதேசங்களில் துப்பரவேற்பாட்டு முறைமைகளை நிருமாணிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.