• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போதுள்ள அனலொக் ஊடுகதிர்பிடிப்பு இயந்திரங்களை டிஜிட்டல் ஊடுகதிர்பிடிப்பு முறைமையாக மேம்படுத்துதல்
- நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே இனங்கண்டு மிகச் சிறந்த முறையில் சரியான நோயினை நிர்ணயிப்பதற்கு டிஜிட்டல் ஊடுகதிர்பிடிப்பு படங்களை பயன்படுத்துவது சாதமான தொழினுட்ப வழிமுறையாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அனலொக் ஊடுகதிர்பிடிப்பு இயந்திரங்களுக்குப் பதிலாக டிஜிட்டல் ஊடுகதிர்பிடிப்பு தொழினுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் 50 அனலொக் ஊடுகதிர்பிடிப்பு இயந்திரங்களுக்கு டிஜிட்டல் ஊடுகதிர்பிடிப்பு பலகங்களை சேர்த்து விருத்தி செய்வதற்கும் 25 கொண்டு செல்லக்கூடிய டிஜிட்டல் ஊடுகதிர்பிடிப்பு முறைமைகளை பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க பெல்ஜியம் FINEXPO சலுகை நிதிமுறையின் கீழ் கிடைக்கப்பெறும் நிதியினைப் பயன்படுத்தி உயர் தரத்திலான தொழினுட்பத்தைக் கொண்ட டிஜிட்டல் ஊடுகதிர்பிடிப்பு பரிசோதனை முறைமையொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.