• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வாழ்க்கைத்தொழில் தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்திற்கும் சீசெல்ஸ் நாட்டின் சீசெல்ஸ் தொழினுட்பவியல் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- கல்வி ஆராய்ச்சி பயிற்சி, திணைக்களம் சார்ந்த ஆளணி பரிமாற்றங்கள், ஆற்றல் விருத்தி மற்றும் கூட்டு மாணவர் செயற்பாடுகள் போன்ற துறைகளில் இலங்கை வாழ்க்கைத்தொழில் தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்திற்கும் சீசெல்ஸ் நாட்டின் சீசெல்ஸ் தொழினுட்பவியல் நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் விஞ்ஞான, தொழினுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.