• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான உடன்படிக்கையை இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் கைச்சாத்திடுதல்
- வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான உடன்படிக்கையொன்றை இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி அரேபிய அரசாங்கத்திற்குமிடையில் கைச்சாத்திடும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.