• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிதி முகாமைத்துவ சட்ட வரைவு
- அரசாங்க நிதி முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளின் வௌிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல், உற்பத்தித்திறன், வினைத்திறன் மற்றும் சிக்கனம் தொடர்பான சட்டகட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கென அறிமுகப்படுத்தப்படுவதற்காக அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டமூலம் தொடர்பில் சிபாரிசுகளை ஆராய்ந்து சமர்ப்பிக்கும் பொருட்டு உரிய துறையில் நிபுணத்துவத்தை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. கூறப்பட்ட குழுவினால் செய்யப்படும் சிபாரிசுகளை உள்ளடக்கிய அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை வரையும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.