• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி அதிகாரசபைகளை வலுப்படுத்துவதற்கும் மாகாண உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நிதியுதவியைப் பெற்றுக்கொள்தல்
- வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் 134 உள்ளூராட்சி அதிகாரசபைகளை உள்ளடக்கி உள்ளூராட்சி அதிகாரசபைகளை வலுப்படுத்துவதற்கும் மாகாண உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்குமான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அதன் அங்கீகாரத்தை ஏற்கனவே வழங்கியுள்ளது. இக் கருத்திட்டத்திற்காக 70 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியுதவியை வழங்குவதற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி நிறுவனம் இணங்கியுள்ளது. அதற்கிணங்க, நிதியங்களை பெற்றுக் கொள்வதற்கான கடன் இணக்கப்பேச்சுகளை மேற்கொள்வதற்கும் உரிய கடன் உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.