• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய அபிவிருத்தி வங்கியினை வலுப்படுத்தும் கருத்திட்டம்
- பிராந்திய அபிவிருத்தி வங்கியின் தொழிற்பாட்டு ஆற்றலை வலுப்படுத்தும் பொருட்டு வறுமை குறைப்பிற்கான யப்பான் நிதியத்திற்கூடாக 01 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு மேலதிகமாக இவ் வங்கியினை வலுப்படுத்துவது தொடர்பிலான கருத்திட்டத்திற்காக 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தொகை கொண்ட நிதியுதவியினை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. ஆதலால், கூறப்பட்ட நோக்கம் கருதி கடன் இணக்கப்பேச்சை மேற்கொள்வதற்கும் உரிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கும் பதில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.