• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாடு
- இலங்கையை மனங்கவரும் சுற்றுலா செல்வதற்குரிய இடமொன்றாக பிரசாரம் செய்வதற்கு விரிவான பிரச்சார நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 06 வியாபார பிரச்சார நிறுவனங்களினால் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விருப்பத் தெரிவினை முன்வைத்துள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தமானது அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 314 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.J.Walter Thompson நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.