• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய அமைச்சரவை மீளமைப்பிற்கு அமைவாக 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துதல்
- 2018 ஆம் ஆண்டினுள் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மீளமைப்பிற்கு அமைவாக தற்போது அமைச்சுக்களின் எண்ணிக்கை 43 ஆக குறைவடைந்துள்ளமையினால் இந்த அமைச்சுக்களின் விடநோக்கெல்லைகளுக்கு அமைவாக 2018 ஆம் ஆண்டு சார்பில் பாராளுமன்றத்தினால் கடந்த திசெம்பர் மாததத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்டத்திலுள்ள நிதி ஏற்பாடுகளை புதிய அமைச்சுக்களுக்கிடையில் பகிர்ந்தளிப்பதன் மூலம் திருத்தும் தேவையானது எழுந்துள்ளது. இதற்கிணங்க மேற்போந்த சட்டத்தின் மூலம் விதித்துரைக்கப்பட்டுள்ள மொத்த செலவு மற்றும் உச்ச கடன் எடுத்தல் எல்லைகள் மாறுபடாத விதத்தில் இந்த ஒதுக்கீட்டுச்சட்டத்தை திருத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.