• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
100 மெகாவோட் காற்று மூலம் செயற்படும் மின்நிலையமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- 100 மெகாவோட் காற்று மூலம் செயற்படும் மின்நிலையமொன்றை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் மன்னார் தீவின் தெற்கு கடற்பரப்பில் நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் டென்மார்க் M/s.Westas Asia Pacifi A/S நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டும் இது தொடர்பிலான உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.