• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு இரண்டு வழிகாட்டி படகுகளை கொள்வனவு செய்தல்
- கொழும்பு துறைமுகத்தினுள் வினைத்திறனுடன் கூடிய கப்பல் சேவையொன்றை வழங்குவதற்குத் தேவையான இரண்டு வழிகாட்டி படகுகளை இலங்கை துறைமுக அதிகாரசபைக்காக கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 3.12 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வரையறுக்கப்பட்ட கொழுப்பு டொக்யார்ட் கம்பனிக்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.