• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வைத்தியசாலையில் காது, மூக்கு, தொண்டை (ENT) தொடர்பான சிகிச்சை சேவை வசதிகளை மேம்படுத்துதல்
- காது, மூக்கு, தொண்டை (ENT) தொடர்பான குறைபாடுகளைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் இந்த குறைபாடுகளுக்கான சிகிச்சை அளிப்பதற்குள்ள வசதிகளை அபிவிருத்தி செய்தல் உட்பட தேசிய வைத்தியாசலை, போதனா வைத்தியசாலைகள், மாகாண பொது வைத்தியசாலைகள், மாவட்ட பொது வைத்தியசாலைகள் மற்றும் தள வைத்தியசாலைகள் ஆற்றலை விருத்தி செய்வதற்கு ஜேர்மன் M/s.VAMED Engineering Deutschland GmbH நிறுவனத்தினால் விரிவான கருத்திட்டப் பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரிப்பை மதிப்பிடுவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான கலந்துரையாடல்களை செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.