• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏற்றுமதி விருத்திக்கான தகவல் தொழினுட்ப முன்னெடுப்பினை நடைமுறைப்படுத்துதல்
- ஏற்றுமதி விருத்தியை ஊக்குவிக்கும் திறமுறையொன்றாக தகவல் தொழினுட்ப முன்னெடுப்பினை 2018 - 2020 மூன்று வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தகவல் தொழினுட்பம் / தொழில்முயற்சி செயற்பாட்டு முகாமைத்துவ துறையின் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சித்திடத்தின் மூலம் அவர்களுடைய தொழில்முயற்சிகளை மேம்படுத்து வதற்கு 2018 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைவாக திட்டமிடப்பட்டுள்ள தகவல் தொழினுட்ப முன்னெடுப்புக்கான நிகழ்ச்சித்திடத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.