• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீளக் குடியமர்த்துவதற்காக காணிகளை விடுவித்தல்
- வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மோதல் நிலவிய காலக்கட்டத்தில் முப்படையினரால் அவர்களுடைய கட்டுக்காப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட தனியார் காணிகளை இந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு விடுவிக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்கீழ் இலங்கை கடற்படையின் பொறுப்பிலுள்ள மன்னார், முள்ளிக்குளத்தில் அமைந்துள்ள 23 ஏக்கர், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள 53 ஏக்கர் காணி உட்பட, இலங்கை இராணுவத்தின் 224 ஆம் படைப்பிரிவு தாபிக்கப்பட்டுள்ள திருகோணமலை தோப்பூரில் அமைந்துள்ள 03 ஏக்கர் காணி என்பவற்றை அவற்றின் ஆரம்ப உரிமையாளர்களுக்கு விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்தப் பிரதேசங்களில் குடியமர்த்தப்படவுள்ள மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகளை நிலையாக பேணுவதற்கு இயலுமாகும் வகையில் இனங்காணப்பட்ட 03 சிறிய குளங்களை தூர்வாரி இந்த பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து அவற்றை ஆரம்ப உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படவேண்டியுள்ளது. இதற்கமைவாக, தற்போது முப்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இயலுமாகும் வகையில் அங்குள்ள வசதிகளை இடம்நகர்த்துவதற்கும் இந்த பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.