• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதிமன்ற கட்டடத்தொகுதிகள் உட்பட, உத்தியோகபூர்வ இல்லங்களின் திருத்த வேலைகளை செய்தல்
- கொழும்பு வணிக உயர்நீதிமன்றமும் நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவும் புராதன பெறுமதிமிக்க பழைய கட்டடத்தொகுதியில் நடாத்திச் செல்லப்படுவதோடு, இதன் பழமை காரணமாக விரைவில் புனரமைக்கப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று கொழும்பு நீதிமன்ற உத்தியோகபூர்வ இல்லமும் சிலாபம் மாவட்ட / நீதவான் நீதிமன்றத்திற்குரிய கட்டடங்களும் துரிதமாக புனரமைக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக, இந்த நிருமாணிப்பு பணிகளை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிருமாணிப்பு நிறுவனங்களின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.